Al Quran Sooras

அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)
மக்கீ, வசனங்கள்: 7

1:1   بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1:1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2   الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1:2அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3   الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1:3(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4   مَالِكِ يَوْمِ الدِّينِ
1:4(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5   إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1:5(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6   اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7   صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.


ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1    قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2   اللَّهُ الصَّمَدُ
112:2அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3   لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4   وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


ஸூரத்துல் ஃபலக்(அதிகாலை)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
113:1    قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
113:1(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2   مِن شَرِّ مَا خَلَقَ
113:2அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3   وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
113:3இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:4   وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
113:4இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:5   وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
113:5பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).


ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
114:1    قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
114:1(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2   مَلِكِ النَّاسِ
114:2(அவனே) மனிதர்களின் அரசன்;
114:3   إِلَٰهِ النَّاسِ
114:3(அவனே) மனிதர்களின் நாயன்.
114:4   مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
114:4பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5   الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
114:5அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6   مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
114:6(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.




ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
மக்கீ, வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
78:1    عَمَّ يَتَسَاءَلُونَ
78:1எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2   عَنِ النَّبَإِ الْعَظِيمِ
78:2மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3   الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
78:3எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:4   كَلَّا سَيَعْلَمُونَ
78:4அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5   ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
78:5பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6   أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
78:6நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7   وَالْجِبَالَ أَوْتَادًا
78:7இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8   وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
78:8இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9   وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
78:9மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10   وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
78:10அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11   وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
78:11மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12   وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
78:12உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13   وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
78:13ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14   وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا
78:14அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15   لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
78:15அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16   وَجَنَّاتٍ أَلْفَافًا
78:16(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17   إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
78:17நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18   يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
78:18ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:19   وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
78:19இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:20   وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
78:20மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21   إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
78:21நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
78:22   لِّلطَّاغِينَ مَآبًا
78:22வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23   لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
78:23அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:24   لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
78:24அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25   إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
78:25கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:26   جَزَاءً وِفَاقًا
78:26(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:27   إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
78:27நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28   وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
78:28அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29   وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
78:29நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:30   فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
78:30“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
78:31   إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
78:31நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32   حَدَائِقَ وَأَعْنَابًا
78:32தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33   وَكَوَاعِبَ أَتْرَابًا
78:33ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34   وَكَأْسًا دِهَاقًا
78:34பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:35   لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
78:35அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36   جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
78:36(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:37   رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ  ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
78:37(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38   يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا  ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
78:38ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:39   ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ  ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
78:39அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
78:40   إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
78:40நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.


அத்தியாயம் - 78

ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

78:1. எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

78:2. மகத்தான அச்செய்தியைப் பற்றி,

78:3. எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

78:4. அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

78:5. பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

78:10.அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

78:14.அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

78:17. நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

78:18. ஸ_ர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

78:19. இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

78:20.மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

78:21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

78:22. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

78:23. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

78:24.அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

78:25. கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

78:26. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

78:27. நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

78:28. அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

78:29. நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

78:30.''ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்"" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.

78:34.பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

78:36. (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

78:37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

78:38. ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

78:39. அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!"" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.