Saturday, August 13, 2011

சவூதி வாகன விபத்தில் இலங்கையர் மூவர் வபாத்தானார்கள்



SATURDAY, 13 AUGUST 2011

சவூதி அரேபியாவின் மக்கா மதீனா பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே வபாத்தாகியுள்ளனர்.

கல்முனை அலியார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய தம்பிலெப்பை போடியார் முகம்மத் மசூத், 40 வயதுடைய ரகுமான் ஜாஹி, 10 வயதுடைய லாபிர் மசூத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பரிதபகரமாக வபாத்தாகியுள்ளனர்.

இக்குடும்பத்தினர் கடந்த இருபது வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரில் வசித்து வந்துள்ளனர். இவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை சவூதி அரேபியாவில் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment